காயிதெ மில்லத் - அடியார்
பூமி அதிராத நடை.. புன்முறுவல் பூந்தோட்டம் போட்ட முகம்... கருணை நிலா ஒளி வீசும் விழிகள்... மென்மையான குரல்.. எந்த நிலையிலும் கண்ணியம் தவறாத சீர்மை இதுதான் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாகிபு.
பூமி அதிராத நடை.. புன்முறுவல் பூந்தோட்டம் போட்ட முகம்... கருணை நிலா ஒளி வீசும் விழிகள்... மென்மையான குரல்.. எந்த நிலையிலும் கண்ணியம் தவறாத சீர்மை இதுதான் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாகிபு.
எங்கள் தமிழாசிரியர் அன்றைக்கு ஒரு நாள்-வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பதிலாக ஷஅரசியல் பேசினார். ஷஷஎத்தனையோ தலைவர்கள் தமிழுக்காக உயிர் விடுகிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இருக்கலாம் என்ற விவாதம் டெல்லியிலே வந்திருக்கிறது. வடக்கே உள்ளவர்கள் இந்திதான் ஆட்சிமொழி என்கிறார்கள். தெற்கே உள்ளவர்கள் ஆங்கிலம்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரு சாகிபுதான் ஷஎங்கள் தமிழ்மொழி எல்லா வளமும் பெற்ற மொழி-அதுவே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கத் தகுதி உள்ளது என்று பேசியிருக்கிறார். அவர் இஸ்மாயீல் சாகிபு.
நல்ல தமிழ் பேசும் நெல்லையைச் சேர்ந்த பச்சைத் தமிழர்.
கேரளத்திலுள்ள மஞ்சேரி (இப்போதைய மலப்புரம்) நாடாளுமன்றத் தொகுதிக்குள் நுழையாமலேயே காயிதெ மில்லத் வெற்றி பெற்றிருந்த நேரம். அவரைச் சந்திக்க நினைத்தேன். எக்கச்சக்கமான கூட்டம், மலர் மாலை, கைத்தறித் துண்டு, பட்டாசு வெடிகள் இவையெல்லாம் இருக்கும் என நினைத்து அவரது இல்லத்தை அடைந்த போது, அதிகாலை நேரத்து ஏரிக்கரைபோல அமைதியாக இருந்தது அவரது வீடு. என்னைப் பார்தததும் அவர் கேட்ட முதல் கேள்வி: பசியாறிட்டீங்களா? பசியாறுதல் எனும் தமிழ்ச் சொல்லின் அழகு பற்றி வியந்து போனேன். ஹஹஉணவு உண்பதற்கு இப்படி ஒரு சொல்லா உங்கள் பகுதியில்? என்று கேட்டேன்.
ஷஷஉணவு உண்டீர்களா என்பதற்காக அல்ல இந்தச் சொல்! ஷபிரேக் ஃபாஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது இந்தச் சொல். காலை உணவு உண்டீர்களா என்று கேட்பதற்குத்தான் இந்தச் சொல் பயன்படுத்தப் படும்என்று பதிலுரைத்தார்.
எழில் எழிலான தமிழ்ச் சொற்கள் எத்தனை நெல்லைப் பகுதியில் வழங்குகின்றன என்று அவர் அடுக்கிக் கொண்டே போனார். ஷபுட்டிங் என்ற சிற்றுண்டி குறித்த சொல்லுக்கு ஷவட்டில் அப்பம் என்ற சொல் இருப்பதாக அவர் கூறியபோது, இமை இரண்டும் சேரா வண்ணம் நெடுநேரம் அவரைப் பார்த்த படி இருந்தேன்.
நபிகள் நாயகம் விழா! காயிதெ மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் பிள்ளையார்பற்றிய கதையைக் கூறிக் கேலி செய்தார். காயிதெ மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, பேச்சாளரின் பேச்சு அதோடு முடிக்கப்படுகிறது!
காயிதெ மில்லத் பேசும்போது சொன்னார்... ஷஷஇது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத் தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றிப் பேச மட்டுமே அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றிக் கேலி செய்து பேசக்கூடாது. இஸ்லாமிய மார்க்கம், ஹபிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர் கள் என்று கூறியிருக்கிறது.
இத்தகைய பண்பு நலன்கள் கொழித்துச் செழித்து இருந்த காரணத்தால்தான் அவர் ஷகண்ணியமிகு காயிதெ மில்லத் என அழைக்கப்படுகிறார்.
நன்றி அடியார்-ஆனந்த விகடன் 10.2.2010

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக